Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரானுக்கு டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஹிஸ்புல்லாவிற்கான நிதியுதவியை ஈரான் நிறுத்த வேண்டும். அது கட்டாயம். ஹார்முஸ் ஜலசந்தியில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. 3 நாட்களுக்கு முன்பே அவர்கள் அதைத் திறந்திருப்பார்கள். அவர்களே நம்மிடம் வந்து, நாங்கள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஒப்புக்கொள்கிறோம் என்று கூறினார்கள்.

என்னைத் தவிர, எனது குழுவில் இருந்த மற்ற அனைவரும் இதனால் மகிழ்ச்சியடைந்தனர். அப்போது நான், ஒரு நிமிடம் பொறுங்கள்; நாம் இதற்கு ஒப்புக்கொண்டால், அதன் மூலம் அவர்கள் தினமும் 50 கோடி டாலர் வருமானம் ஈட்டுவார்கள் என்றேன். இந்தப் பிரச்னையை அவர்கள் முழுமையாகத் தீர்க்கும் வரை, அவர்கள் தினமும் 50 கோடி டாலர் சம்பாதிப்பதை நான் விரும்பவில்லை. கடந்த 6 வாரங்களாக போர் நிறுத்தம் கொண்டு வர செயல்பட்டு கொண்டிருக்கிறேன். ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்கா அவசரப்படவில்லை; ஆனால் காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஈரானின் ராணுவம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. துப்பாக்கிகளுடன் கூடிய படகுகளை அவர்கள் அங்குமிங்கும் ஓட்டித் திரிகிறார்கள்; அவற்றை நாங்கள் காணும்போது, அவற்றையும் அழித்துவிடுவோம்.

ஈரானின் கடற்படையும், விமானப்படையும் இல்லாமல் போய்விட்டன. அவர்களின் வான்வழித் தடுப்பு அமைப்புகளும் அழிந்துவிட்டன. அவர்களின் தலைவர்கள் அனைவரும் இல்லாமல் போய்விட்டனர். இந்தப் பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால், அவர்கள் தங்கள் தலைமைத்துவத்தை இழந்துவிட்டார்கள்; மேலும் அவர்கள் பூனைகளும் நாய்களும் சண்டையிடுவது போலத் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொள்கிறார்கள்.

இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.

error: Content is protected !!