Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் அருகே மூதாட்டியின் கை-கால்களை கட்டி நகை கொள்ளை- மூதாட்டி பலி

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தை அருகே சாலப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த தாயாரம்மாள் (வயது 79). மகன் மற்றும் கணவர் உயிரிழந்த நிலையில் கிராமத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று இரவு அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் தூக்கிக் கொண்டிருந்த மூதாட்டியின் கை, கால்களை கயிற்று கட்டிலுடன் சேர்த்து கட்டி வைத்ததுடன், வாயில் துணியை வைத்து அடைத்து சத்தம் போடால் இருக்க செய்துள்ளனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த அரை பவுன் தோடு மற்றும் 1 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்

கொண்டு மர்ம நபர்கள் சென்று விட்டனர். இன்று காலை வழக்கமாக வீட்டை விட்டு மூதாட்டி வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனை தொடர்ந்து வெள்ளியணை காவல் நிலைய போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததுடன், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாடியை நகைக்காக மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!