கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள், கேரளாவில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு சிறிய வியாபாரிகள், பொதுமக்கள் வந்து மீன்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமலில் உள்ளது. இதனால் உக்கடம் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இருந்து மீன்கள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்து உள்ளது.
இருந்த போதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ரூபாய் 800 முதல் ரூபாய் 1,000

வரை விற்பனையான. ஒரு கிலோ வஞ்சிரம் நேற்று ரூபாய் 1,200 க்கு விற்கப்பட்டது.
நேற்று 40 கிலோ மீன் ஒன்று உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனை வியாபாரிகள் நான்கு பேர் கைகளில் தூக்கிக் கொண்டு வந்தனர் இந்த மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
