Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஈரோடு வெற்றி….. கரூரில் காங்., கட்சியினர் கொண்டாட்டம்…..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் இடைத்தேர்தலில்

காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி உள்ள நிலையில், மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன் பாபு தலைமையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மனோகரா கார்னர் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!