Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி வந்த ஹவுரா ரயிலில் கடத்தல் கஞ்சா மூட்டை பறிமுதல்


மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து கன்னியாகுமரிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது. அப்பொழுது பயணிகள் அந்த ரெயிலில் ஏறி இறங்கினர். இதைத்தொடர்ந்து
ஒரு மர்ம ஆசாமி பெரிய மூட்டையுடன் இறங்கி நடந்து சென்றார். அப்பொழுது அந்த ஆசாமியை போலீசார் பார்த்து உள்ளனர். அப்பொழுது அந்த மர்ம ஆசாமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் வைத்திருந்த மூட்டையை வாங்கி சோதனை செய்தார். அப்போது அதில் கஞ்சா பதுங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த மர்ம ஆசாமியை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கஞ்சாவை மர்ம ஆசாமி எங்கிருந்து கடத்தி வந்தார்.அந்த மர்ம ஆசாமை யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும், அவன் யாருக்கு கொடுக்க எடுத்து சென்றார் என்பது குறித்து ரெயில்வே போலீசாருடன் இணைந்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!