இந்தியாவில் இ-சிகரெட் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்திய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டாகி வெளியேறிய போது, டிரஸ்சிங் ரூமில் இதைச் செய்துள்ளார். ரியான் பராக்கின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
