Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோடை சுற்றுலா… சென்னையில் இருந்து பக்டோக்ராவுக்கு நேரடி விமான சேவை

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தேர்வுகள் முடிந்து, தற்போது கோடைக்கால விடுமுறை துவங்கியிருக்கிறது. இச்சமயத்தில் தங்களின் குடும்பத்தினருடன் இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சென்றுவர விரும்புபவர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர். மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் கோடை வெயிலின் உக்கிரத்தை சமாளிக்கும் வகையில், வடமாநிலங்களில் உள்ள மலைவாசஸ்தலங்களுக்கும் புறப்பட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மலைவாசஸ்தல சுற்றுலா பகுதியான பக்டோக்ரா நகருக்கு, வரும் மே 1ம் தேதி முதல் சென்னையில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேரடி விமான சேவையைத் துவங்கவிருக்கிறது. இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தவிர, செவ்வாய் முதல் ஞாயிறு வரை என 6 நாட்களிலும் இயக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலைய உள்நாட்டு முனையம், டெர்மினல் 4ல் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் மாலை 3.45 மணியளவில் புறப்பட்டு, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பக்டோக்ரா நகருக்கு மாலை 6.20 மணியளவில் சென்றடைகிறது. இதேபோல் வாரத்தில் 6 நாட்களும் பக்டோக்ராவில் இருந்து காலை 9.45 மணியளவில் புறப்பட்டு, அன்று மதியம் 12.20 மணியளவில் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னைக்கு வந்து சேருகிறது. இந்த விமான சேவை கோடைக்கால சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள பக்டோக்ரா மலைவாசஸ்தல சுற்றுலாத்தலமாக மட்டுமின்றி, சென்னையில் இருந்து செல்பவர்களுக்கு கிழக்கு இமயமலையின் நுழைவு வாசலாகவும் பக்டோக்ரா நகரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இப்புதிய விமான சேவை சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், தனது கோடைக்கால சிறப்பு அட்டவணைகளின் முதல் பகுதியாக, மேலும் 11 நகரங்களான புனே, மும்பை, கொச்சி, பாட்னா, சண்டிகர், கொல்கத்தா, அகமதாபாத் உள்பட பல்வேறு நகரங்களுக்கு வரும் மே 1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவைகளையும் இயக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

error: Content is protected !!