Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

லாரிகளில் மண், கற்கள் கடத்தல் ..2 லாரிகள் பறிமுதல்

லாரிகளில் மண், கற்கள் கடத்தல் ..2 லாரிகள் பறிமுதல்

திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையம் அருகே கனிமவளத்துறை சிறப்பு தாசில்தார் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈபபட்டனர். அப்போதுபஞ்சப்பூர் கிராம நிர்வாக அதிகாரி சாமுவேல் மில்டன் லாரியை மறித்து சோதனை இட்டார்.லாரியில் 5 யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதுகுறித்து சிறப்பு தாசில்தார் குணசேகரன் அளித்த புகாரியின் அடிப்படையில் இடங்களைப் பற்றி புதூர் போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
இதே போல் திருச்சி கே.கே.நகர் பகுதியில் 3 யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை கனிமவளத்துறை அதிகாரி வின்ஷா தலைமையிலான அதிகாரிகள் சோதனையிட்டு மடக்கி பிடித்தனர். இதுகுறித்து வின்ஷா அளித்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ்சரகம் ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சிறப்பு இன்ஸ்பெக்டர் சதீஷ்ராஜ் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனி கோபால் மனைவி திலகவதி (வயது 60) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மலைராஜா தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் கோனார்குளம் பகுதியில் கஞ்சா விற்றதாக ருக்மான் (வயது 49) என்பவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முடிவில் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

error: Content is protected !!