Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செல்போன் பார்க்கக் கூடாது எனக் கண்டித்த பெற்றோர் – பிளஸ்-2 மாணவர் தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, பக்க நாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நந்தகுமார் (18). இவர் சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வை எழுதி இருந்தார். தேர்வு விடுமுறையில் வீட்டில் தொடர்ந்து அதிக நேரமாக செல்போன் பார்ப்பதை மாணவர் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் நந்தகுமாரை அவரது பெற்றோர் அதிக நேரம் செல்போன் பார்க்கக் கூடாது எனக்கூறி கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவர் நந்தகுமார் எடப்பாடி அடுத்த தாதாபுரம் கிராமம், மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனது பாட்டி லட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து சோகமாக இருந்த மாணவர் நந்தகுமார் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

அக்கம் பக்கத்தினர், நந்தகுமாரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்ததை உறுதி செய்தனர். இந்த சம்பவம் குறித்து எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!