நேற்று மாலை திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி வந்த பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஒரு டீக்கடையில் நிறுத்தப்பட்டது. அந்த கடையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு டீ, வடை இலவசமாக வழங்கப்படுவதால் பேருந்து அங்கு நிறுத்தப்பட்டதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதே கடையில் ஒரு டீ ரூ.25க்கு விற்கப்பட்டதாகவும், அருகிலேயே ரூ.15க்கு டீ விற்பனை செய்யும் கடை இருந்தபோதிலும் ஏன் அதிக விலைக்கு விற்கும் கடையில் பேருந்தை நிறுத்துகிறீர்கள் என ஒரு பயணி கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர், அந்த பயணியை அவரது மனைவி மற்றும் மகள் கண் முன்னே தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது “அடிக்காதீங்க அண்ணா…” என்று மனைவியும் மகளும் கெஞ்சியபோதும் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. மேலும், சம்பவத்தை தடுக்க முயன்றவர் இடம் பேருந்து ஓட்டுநர் அவர் என்ன செய்தார் என்று தெரியுமா எனக்கூறினார் அப்போது எதுவாக இருந்தாலும் நீங்கள் எதற்காக அடித்தீர்கள் இது மிகவும் தவறு என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
