ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசை விட சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகளுக்கும் பூத்துகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 22 பூத்துகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் வீரப்பன் சந்திரம் பகுதி முழுவதிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது வீரப்பன் சந்திரம் பகுதி வாக்குசாவடிகளில் 16222 வாக்குகள் பதிவாகின.
