திருச்சி புத்தூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் அழகுராணி (47) இவரது மூத்த சகோதரியின் மகன் 16 வயது சிறுவன். அவனது தாய் மற்றும் தந்தை இறந்துவிட்டதால், அவன் இவர்களது வீட்டில் வசித்து வருகிறான். இந்நிலையில் கடந்த 28 ந்தேதி சிறுவன் வீட்டிலிருந்த 4 முக்கால் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடி, தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தத் தங்க நகைகளை விற்பனை செய்துள்ளான்.
இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தினேஷ் ( 4) கள்ளங்காடு பகுதியை சேர்ந்த விஜய் (25)ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 33 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுவனை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தனர்.
