+2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக் விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது. LongDistance Bus & Rail
மாணவர்கள் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள www.tneaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பதிவின் போது மாணவர்கள் தங்களின் அடிப்படை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை மின்வருடல் (Scan) செய்து பதிவேற்ற வேண்டும். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகசெய்திகள்
மேலும் உள்ள
விபத்தில் அரசு ஊழியர், முதியவர் பலி; ரூ.52 லட்சம் நஷ்டஈடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி’
திருச்சூர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்து பலி 14 ஆக உயர்ந்தது: படுகாயமடைந்த 22 பேருக்கு சிகிச்சை’
திருப்போரூரில் வெயிலின் உக்கிரத்தால் கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்: உடனடியாக அகற்றும் பணி’
மேற்குவங்க தேர்தல் களத்தில் வாக்காளர்களின் மனதை கவரும் பிரபலங்கள், வேட்பாளர்கள்: திரிணாமுல், பாஜக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் சுறுசுறுப்பு’
ரத்தக் களறியான பிரசாரக் களம் பாஜக வேட்பாளரின் எலும்பை முறித்த கும்பல்: இறுதிகட்ட பிரசாரத்தில் பதற்றம்’
1800 425 0110, theacare@gmail.com மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு முடிந்தவுடன் மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் பின்னரே இணையவழி கலந்தாய்வு (Online Counselling) பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
