Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவித்து புறப்பட்டார் நடிகை திரிஷா

சென்னையில் த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிலிருந்து புறப்பட்டார் நடிகை திரிஷா.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இல்லத்துக்கு வந்த நடிகை த்ரிஷா, தற்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் . தவெக தலைவர் விஜய்க்கு அவருடைய இல்லத்திற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் நடிகை த்ரிஷா. 

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத அளவில் முன்னிலை வகித்து வருவது அரசியல் வட்டாரங்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.கூட்டணி ஆதரவு இல்லாமல் தனியாக களமிறங்கிய இந்த கட்சி, 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், “முதல் தேர்தலிலேயே ஆட்சியா?” என்ற கேள்வி இப்போது “முதல்வராகிறாரா விஜய்?” என்ற விவாதமாக மாறியுள்ளது. பல அரசியல் நிபுணர்களும், இது சாதாரண முன்னேற்றமல்ல, பெரிய அரசியல் மாற்றத்தின் அறிகுறி எனக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!