Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தோல்வி என்பது புதிதல்ல.. அது ஒரு புதிய துவக்கம்.. கனிமொழி

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம். புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கு வாழ்த்துகள்’ என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம்.

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர்.

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம். அரசியல் – பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம்.

வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்” எனவும் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!