Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு… திருச்சி க்ரைம்

மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அதனை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சோதனைக்காக கொண்டு சென்றனர் .இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயங்கி விழுந்து டீக்கடை ஊழியர் சாவு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்சி நகரை சேர்ந்தவர் ராஜூ ( 55) இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி அன்று ராஜு திடீரென சுயநினைவின்றி கீழே மயங்கி விழுந்த அவருக்கு வாயில் நுரை வந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த 108ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்தனர்.பரிசோதனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூங்கியபோது கட்டிலில் இருந்து விழுந்தவர் சாவு..

திருச்சி புத்தூர் வடக்கு முத்துராஜா பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 38) இவருக்கு காச நோய் பிரச்சினை உள்ளது. இந்த நிலையில் மதுபோதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டி சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!