Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள தவெக எம்.எல்.ஏக்கள்!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது  இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தென் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவிற்கு செல்வதற்கு வசதியாக மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று மாலை ஆறு மணி முதல் பல்வேறு தென் மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி மதுரை, திருச்சி, கோவை, கரூர் உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 48 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிகளுக்காக ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 10 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 210 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ள நிலையில் ஏழாம் தேதி மாலை 6 மணி வரை தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள 77 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!