Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து சாவு

புது மாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது29). இவருக்கும் சினேகா என்பவருக்கும் திருமணம் ஆகி வெறும் 6 மாதங்களே ஆகிறது. இவர்களுக்கிடையேயும் குடும்பப் பிரச்சினை இருந்ததாகத் தெரிகிறது.இதனால் விஷம் குடித்த பாலாஜி, அது குறித்து தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணமான ஆறே மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவர் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.உடையாபட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது78). இவருக்கு கண் பார்வை மங்கலாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடிப் பார்த்தபோது, அப்பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் முத்துசாமி பிணமாக மிதப்பது தெரியவந்தது. மணப்பாறை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டனர். இது குறித்து அவரது மகன் வேலுசாமி அளித்த புகாரின் பேரில், மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!