பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பிரசித்திபெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடியினை பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஆலயம் சுற்றி ஊர்வலமாக கொண்டு வந்து

பேராலயம் முன்பு ஆயர் ஜீவானந்தம், கொடி மரத்தில் கொடியை ஏற்றி வைத்தனர்
அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கையை மேலே உயர்த்தி அன்னை மரியே வாழ்க

என முழக்கமிட்டு மாதாவை வழிபட்டனர். 10 நாட்கள் தினமும் சிறப்பு திருப்பலியும் 14 தேதி இரவு நாளன்று மாதாவின் அலங்கார தேர்பவனி விழாவும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது

