Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள்:
தலைவருக்கு முழு அதிகாரம்: சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில், ஆட்சி அமைப்பு மற்றும் அரசியல் நகர்வுகள் தொடர்பாக உடனடி முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் மீது கடும் சாடல்: கூட்டணியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் எடுத்த முடிவுக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. “காங்கிரஸ் தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இந்த முடிவு காட்டுகிறது” என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“முதுகில் குத்திய காங்கிரஸ்”: வெற்றி பெற்ற பிறகு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் செயல்பட்ட திமுக தலைவருக்கு நேரில் வந்து ஒரு நன்றியைக்கூடத் தெரிவிக்காமல், காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளதாக திமுக உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
துரோகப் பின்னணி: கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே, திமுகவிற்கு எதிரான கருத்துகளைக் காங்கிரஸ் கட்சியினர் பரப்பியதை அக்கட்சித் தலைமை தடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை. குறிப்பாக, கூட்டணிக் கட்சிகளின் உழைப்பால் கிடைத்த வெற்றியைப் பணயம் வைத்து, வெறும் 3 நாட்களுக்குள் காங்கிரஸ் மாற்று அணிக்கு மாறியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என இக்கூட்டத்தில் பேசப்பட்டது.

error: Content is protected !!