Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை… விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?

தேர்தலுக்கு பிந்தைய அசாதாரண சூழலை கையாளுவதில் விஜய் தடுமாறிப்போய் இருக்கிறாரா? என விசிக சிந்தனை செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். வாட்ஸ்அப்பில் விஜய் ஆதரவு கடிதம் அனுப்பினால் எப்படி புரிந்துக்கொள்வது?.. தவறான அணுகுமுறை, வழிகாட்டல்தான் ஆதரவு வருவதற்கான வழியை அடைத்து வைத்து இருக்கிறது. தமிழ்நாட்டில் கொல்லைப்புற வழியாக ஆளுநர் ஆட்சியை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது. ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித்தலைவர்களை விஜய் நேரில் சந்தித்திருக்க வேண்டாமா?.. பாஜக தமிழகத்திற்குள் நுழைய முயற்சிப்பதை தடுக்க வேண்டியதன் அவசியம் பற்றி உரையாடியிருக்க வேண்டாமா?. என்று இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். விஜயை இளவரசாக்கி முடக்கி வைத்துள்ளனர் என்று விசிக குற்றம்சாட்டியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் விஜய் என்ன செய்ய போகிறார் என்று தமிழகத்தை ஆள… நேரில் சென்று ஆதரவு கேட்கிறாரா ? என்று… தமிழகத்தை விஜய் ஆள வேண்டும் என்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ஆனால் விஜய் என்ன செய்ய போகிறார்?…

error: Content is protected !!