மார்ச் 2026ஆம் ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. கரூர் மாவட்டத்தில் மொத்தம் 10,024 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 9,643 பேர் தேர்ச்சி பெற்று, 96.20% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
மாணவர்கள் 4,666 பேர் தேர்வு எழுதியதில் 4,427 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 5,358 பேர் தேர்வு எழுதியதில் 5,216 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் மொத்தம் 5,117 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 4,814 பேர் தேர்ச்சி பெற்று 94.08% தேர்ச்சி விகிதம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தப் பள்ளிகள் 104 ஆகும். இதில் 35 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
கரூர் மாவட்டம் மாநில அளவில் 15ஆம் இடத்தை பெற்றுள்ளது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் செயல்பட்டு வரும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தப் பள்ளியில் இருந்து 328 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி சாதனை புரிந்துள்ளனர்.
பள்ளியின் மாணவி உபாஸ்ரீ 594/600 மதிப்பெண்கள் பெற்று கரூர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும், சர்வஜித் 588/600 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் மாணவிகளை பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
