திருச்சி ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயவன் ( 28.) சம்பவத்தன்று 4 பேர் கொண்ட கும்பல் இவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். இதுகுறித்து மாயவன் மனைவி கேட்டபோது அவருக்கும் அந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மாயவனின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் ஜன்னலை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மாயவன் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் (29) லால்குடி தச்சான் குறிச்சி பகுதியைச் சேர்ந்த விஜய மோகன் (39) ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற ஜாமினில் விடுவித்தனர். மேலும் லால்குடி தச்சாங்குறிச்சி சேர்ந்த ராஜ் மோகன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போல் ராஜ்மோகன் என்பவரை தகாத வார்த்தைகளை திட்டி தாக்கியதாக மாயவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
