Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே பயங்கரம்: கரும்புத் தோட்டத்தில் பெண் படுகொலை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி. இவர் மர்மமான முறையில் கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தப்பட்டும் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேலப்பட்டி தெற்கு களம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி சிவரஞ்சனி (40). இவரது கணவர் திருச்சி தனியார் பழக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு விகாஷ் (23) என்ற மகன் உள்ளார் இவர் பெங்களூர்ல தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியூர்களில் பணியாற்றி வருவதால் சிவரஞ்சனி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். சம்பவ நாளான இன்று காலை வழக்கம்போல் வெகுநேரமாக வீடு திறக்காமல் இருப்பதைக் கண்ட அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது வீட்டில் அவரை காணவில்லை. உடனே மற்ற உறவினர்களுக்கு கால் செய்து அவர் வீட்டில் இல்லாமல் போனது குறித்து தெரிவித்துள்ளனர் அவர்கள் வந்து பார்த்தபோது அருகில் இருந்த கரும்பு காட்டில் மர்மமான முறையில் உடலில் ஆடைகளின்றி நைலான் கயிற்றால் கழுத்து இறுக்கப்பட்டும், கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் குத்தப்பட்டும் இறந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் குறிஞ்சி சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். மோப்ப நாய் குறிஞ்சி சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று விட்டு நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட எஸ்பி ஹரிகிரண் பிரசாத் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

sex

error: Content is protected !!