Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வெங்கமே மில்ஸ் வெஞ்சமடை ஊரை சேர்ந்தவர் திரு. செல்வராஜ் இவரின் மகன் கருப்புசாமி வயது 22 கடந்த 10/5/26 அன்று காலை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிக்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் கருப்புசாமி அவர்களின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்-வந்தனர். மருத்துவமனையின் முதல்வர் Dr.M.கீதாஞ்சலி MD தலைமையின் கீழ் மருத்துவர்கள் குழு தமிழ்நாடு உறுப்புமாற்று ஆணையத்தின் வழிகாட்டுதல் படி உடல் உறுப்பு தானம் மேற்கொண்டது.

1. கல்லீரல் – கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும்,

2. ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவ மனைக்கும்

3. மற்றொரு சிறுநீரகம் – கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.

உடல் உறுப்புதானம் செய்த கருப்புசாமியின் உடலுக்கு மருத்துவமனையின் முதல்வர், இருப்பிட மருத்துவ அதிகாரி, செவிலியர்கள், மற்றும் பணியாளர்கள் அரசு மரியாதை செய்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!