சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து முதல்வர் விஜய் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அரசின் நிதிநிலை குறித்து வௌ்ளை அறிக்கை வௌியிடப்படும் என ஏற்கனவே முதல்வர் விஜய் கூறியிருந்தார். அரசின் திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிதி குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. துறைவாரியாக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார்.
