Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்… மு.க.ஸ்டாலின்

தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்; தோல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது; அதுதான் நியாயம்.

நீங்களும் இந்த தோல்விக்காக அடுத்தவர் மீது பழிபோட வேண்டாம்; தோல்வியின்போது ஆதங்கத்தைக் கொட்டுவது இயல்பு; அது பழியாக இருக்கக்கூடாது.

தோல்வி குறித்து ஆய்வு செய்வது அவசியம்தான்; ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக்கூடாது-சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேச்சு.

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி, மாயாஜால சுனாமி; சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது; பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.

எங்கே கோளாறு? எங்கே மெத்தனம்? என்பதுதான் முக்கியம்; அதை ஆய்வு செய்தாக வேண்டும்; இது தேர்தல் சுழல்தானே தவிர, நாமெல்லாம் எழுந்திருக்கவே முடியாத தோல்வி கிடையாது.

செயல்பட முடியாது என நினைக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியிலிருந்து விலகலாம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

error: Content is protected !!