Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பதி-சித்தூர் சாலையில் லாரி மீது கார் மோதி… 2 பேர் பலி

ஆந்திரா: திருப்பதி – சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். கோத்தகோட்டா ரயில்வே பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துகுள்ளானது. விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை நேரத்தில் கொத்தகோட்டா மேம்பாலம் அருகே, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில், அதிவேகமாக வந்த இன்னோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் அதிகாலை நேரத்தில் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!