Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற – மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்திய நிலையில், முதல் அமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விலை உயர்வை உடனே திரும்ப பெறவும் விஜய் வலியுறுத்தியுள்ளார். முதல் அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களின் விலையை, குறிப்பாக லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3/- மற்றும் டீசல் ரூ.3/- என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையைக் குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும் அந்த நிறுவனங்கள் எடுத்துக்கொள்கின்றன. ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலியப் பொருட்களின் இந்த விலை உயர்வு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள் மற்றும் சிற்றுந்துகளைப் பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மாத வருமானத்தில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், வங்கிக் கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள் இதனால் கூடுதல் நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும் பாதிக்கப்படும். மேலும், இந்தப் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக வாடகை வாகனத்தின் வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது அன்றாடப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன் ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!