ஓடும் பஸ்ஸில் கைவரிசை.. வாலிபர் கைது
திருச்சி, வடக்கு தராநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 40) இவர்சத்திரத்திலிருந்து நேற்று சமயபுரத்துக்கு பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.1250 பணத்தை பறித்தார். அப்போது சுதாகரித்துக் கொண்ட அவர் அந்த நபரை கையும் களவுமாக பொதுமக்கள் உதவியுடன் பிடித்து
போலீ சாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து பத்தாலபேட்டை செட்டியார் பேட்டை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த லாரன்ஸ் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
மாமியார் வீட்டுக்கு வந்த ஐடி ஊழியர் திடீர் சாவு..
திருவள்ளுவர் மாவட்டம் குளத்தூர் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பிரியா (வயது 39 ) சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் தீபக் , ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் திருச்சி உறையூர் பகுதியிலுள்ள அவரது தாயாரின் வீட்டிற்கு வந்தனர். இந்நிலையில்
கணவர் தீபக்கிற்கு தோள்பட்டை வலி ஏற்பட்டது
பின்னர் திடீரென அவரது உடல் வியர்க்கத் தொடங்கியது. உடனடியாக, அவர் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சேர்ர்த்தனர்.
அவரைப் பரிசோதித்து டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேர் கைது..
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எடமலைப் பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டனர் . பின்னர் பஞ்சப்பூர் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மில்காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கீர்த்தி வாசன் (வயது 22) என்பவரை கைது 215 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
இதேபோன்று ராம்ஜி நகர் பகுதியில் வீட்டின் அருகே வைத்து கஞ்சா விற்ற ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்த விமலா தேவி (59) முத்துராமன் (49) ஆகியோரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 கிலோ 475 கிராம் கஞ்சாவை மதுவிலக்கு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
