Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், தமிழ் திரையுலகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அடிக்கடி யூ டியூப் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வந்தவர். கே.ராஜன் தற்கொலை திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 1980-களில் இருந்து தீவிரமாக இயங்கி வந்தவர் கே.ராஜன். சுரேஷ் நடித்த ‘பிரம்மச்சாரிகள்’ (1983) திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். கணேஷ் சினி ஆர்ட்ஸ் மூலம் பல திரைப்படங்களை தயாரித்த இவர், அப்பாஸ் – குணால் நடித்த ‘உணர்ச்சிகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில் சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சினிமா வர்த்தகத்தில் முக்கியப் பங்காற்றினார். இவரது மகன் பிரபுகாந்தும் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!