Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயலில் ஏறியபோது தவறி விழுந்த பெண்… காப்பாற்றிய காவலர்… பாராட்டு

ரயலில் ஏறியபோது தவறி விழுந்த பெண்-காப்பாற்றிய காவலர்-பாராட்டு

திருவள்ளூர்: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் புறநகர்ரயிலில் ஏறியபோது தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் காப்பாற்றிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் சங்கர் லால் மீனா மற்றும் ஆர்பிஎஃப் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் ரயில் வரும்போது ரயில்வே நடைமேடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை புறநகர் மின்சார ரயில் நின்று புறப்பட்டது.

அதில் ஒரு பெண் ஏற முயன்றபோது, அப்பயணி நிலைதடுமாறி ரயிலிலிருந்து கீழே விழும் அபாயத்தில் இருந்தார். அப்போது ஆர்பிஎஃப் போலீசார் உடனடியாக ஓடி பயணியைப் பாதுகாப்பாக ரயிலுக்குள் தள்ளினர். இதனால் அங்கு ஏற்படவிருந்த ஒரு விபத்தை தடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினர். ஒன்றிய அரசின் ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ் பயணிகளின் பாதுகாப்பிற்கான அவரது விழிப்புணர்வு, சமயோசித புத்தி மற்றும் அர்ப்பணிப்பை இந்த நிகழ்வு வெளிப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். இந்த உயிர்காக்கும் செயலின் சிசிடிவி காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்று வருகிறது.

error: Content is protected !!