தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில், கரெ சையம்மா (40) என்ற பெண் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரது மூத்த மகன் கரெ துர்கேஷ் (21) கொலை செய்தது தெரியவந்தது. ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றிய அவர், சம்பவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். கிராமத்தில் நடந்த சில மரணங்களுக்கு தாய் பில்லி சூனியம் வைத்ததே காரணம் என மூடநம்பிக்கையால் சந்தேகப்பட்ட அவர், குடிபோதையில் தாய்மீது டீசல் ஊற்றி கொலை செய்ததாக கூறப்படுகிறது.
தாயை டீசல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன்.. அதிர்ச்சி வாக்குமூலம்
