Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஏலகிரி மலைப்பாதையில் தீப்பிடித்த கார்: உயிர்சேதம் தவிர்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தளத்திற்கு செல்லும் மலைப்பாதையில், 10-வது கொண்டை ஊசி வளைவில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவர் தனது மனைவியுடன் காரில் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் சென்றுகொண்டிருந்தபோது இன்ஜின் சூடாகி திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும், தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த கோகுல் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏலகிரி மலை காவல்துறையினர், கார் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏலகிரி மலைப்பாதையின் 10-வது கொண்டை ஊசி வளைவில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

error: Content is protected !!
Secret Link