Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்

ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில், திருச்சி ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடைக்கு நேற்று வந்தது. அப்போதுரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்பொழுது
ரயிலின் முன்புற பொதுப் பெட்டியில் இருக்கைக்குக் கீழே ஒரு சாக்குப் பையும், பின்புற பொதுப் பெட்டியில் இருக்கைக்குக் கீழே மற்றொரு சாக்குப் பையும் கேட்பாரற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவற்றைச் சோதனையிட்டபோது குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் அந்த குட்கா மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் கஞ்சாத்தூள் கலந்த
கஞ்சா சாக்லேட்டுகள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுவாக கஞ்சாவை புகைப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது வித்தியாசமாக கடத்தல் ஆசாமிகள் கஞ்சாவை காயவைத்து தூளாக்கி அதை மிட்டாயுடன் கலந்து கஞ்சா சாக்லேட்டாக விற்பது தெரியவந்துள்ளது
இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை.
இது எந்தப் பகுதியிலிருந்து கடத்திவரப்பட்டது இதன் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து எந்த விபரமும் தெரியவில்லை.
திருச்சி ரயில் நிலையத்தில் கஞ்சாவை தொடர்ந்து கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link