Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தஞ்சை கடலோரப் பகுதிகளில் ‘சீ விஜில்’ பாதுகாப்பு ஒத்திகை: தீவிர ரோந்துப் பணி!

கடல் வழியாகத் தீவிரவாதிகள் நாட்டிற்குள் ஊடுருவுவதைத் தடுக்கும் வகையில், இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை மற்றும் தமிழகக் காவல்துறையின் கடலோரப் பாதுகாப்புப் பிரிவு இணைந்து ‘சீ விஜில்’ (Sea Vigil) என்ற கடல் பாதுகாப்பு ஒத்திகையை இன்று (நவ.26) மேற்கொண்டன.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் காவல் கண்காணிப்பாளர் முருகன் மற்றும் ஆய்வாளர் செந்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

கடல் பகுதிகள், மீனவ கிராமங்கள் மற்றும் படகு இறங்குதளங்களில் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்ட போலீசார், கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைச் சரிபார்த்தனர்.

மேலும், கடலோரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மீனவ மக்களிடையே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

error: Content is protected !!
Secret Link