சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, திருச்சியில் நேற்று காலை பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. பின்னர், பிற்பகல் மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி யது.திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று பெய்த மழையால் பல சாலைகள் கொண்டும் குழியுமாக மாறியது.திருச்சி மாநகராட்சி 62 ஆவது வார்டுக்கு உட்பட்ட கீழப்பஞ்சபூர் ஊரணி கரை பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது இதனால் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மழை நீரை வெளியேற்ற மிகவும் சிரமப்பட்டனர். இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக சத்திரம் பேரு ந்து நிலையம், தில்லை நகர் பிர தானசாலை,மத்தியப்பேருந்து நிலையம், ரயில் நிலைய ரவுண் டானா, காந்தி மார்க்கெட், புத்தூர், மேலப்புதூர் சுரங்கப் பாதை, பாலக்கரை மற்றும் தென்னூர் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளின் சாலையோ ரத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்குள்ளாகினர்.
சுவர் இடிந்து இரண்டு பேர் சாவு
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழைக்கு சுவர் இடிந்து இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே செவல்பட்டி அருகே கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை மகன் நல்லதம்பி (வயது60). கூலி தொழிலாளி. தனியாக வசித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் அருகே கட்டிலில் படுத்திருந்தார். அப்போது மழையின் காரணமாக ஊறியிருந்த சுற்றுச்சுவரின் மேற்பகுதி கற்கள் திடீரென, இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சித்தப்பா ராஜேந்திரன், அளித்த தகவலின் பேரில், துவிரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நல்லதம்பி உடலை மீட்டனர். போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.இதேபோன்று திருச்சி மாவட்டம் ஜி.யபுரம் அருகே உள்ள கடியாக்குறிச்சியை சேர்ந்தவர்
கண்ணன் (வயது 57) இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் இவர் தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த கண்ணன் மீது ஏற்கனவே சேதம் அடைந்திருந்த வீட்டில் மண் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழை அளவு
நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக வாத்தலை அணைக்கட்டு பகுதியில் 82.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு கல்லக்குடி 43.4 ,லால்குடி 15.6, நந்தியாறு அணைக்கட்டு 40, புள்ளம்பாடி 50.4, தேவி மங்கலம் 12.6, சமயபுரம் 25.4, சிறுகுடி 8.2, மணப்பாறை 13.6, பொன்னணியாறு அணை 24.6, கோவில்பட்டி 64.2, மருங்காபுரி 62.4 ,முசிறி 34, புலிவலம் 12, தாப்பேட்டை 14, நவலூர் கொட்டப்பட்டு 72 ,துவாக்குடி 29.2 ,கொப்பம்பட்டி 21, தென்பர நாடு 20, துறையூர் 18, பொன்மலை 25, திருச்சி ஏர்போர்ட் 27 ,திருச்சி ஜங்ஷன் 32.6 ,திருச்சி டவுன் 39 ,என ஆக மொத்தம் நேற்று மாவட்ட முழுவதும் 786.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழையால் ஊறிய
சுற்றுச்சுவர் விழுந்ததில்
முதியவர் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், செவல்பட்டி அருகே கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் துரை மகன் நல்லதம்பி (60). கூலி தொழிலாளி. தனியாக வசித்து வந்த இவர், நேற்று மாலை வீட்டின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் அருகே கட்டிலில் படுத்திருந்தார். அப்போது மழையின் காரணமாக ஊறியிருந்த சுற்றுச்சுவரின் மேற்பகுதி கற்கள் திடீரென, இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்த நல்லதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது சித்தப்பா ராஜேந்திரன், அளித்த தகவலின் பேரில், துவிரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நல்லதம்பி உடலை மீட்டனர். போலீஸார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
