Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போலி நகைகளை அடகு வைத்து லட்சக்கணக்கில் மோசடி: 3 பேர் கைது!

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த மாதம் 5-ஆம் தேதி டில்லிபாபு என்பவர், 6 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.4 லட்சத்து 67 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். பின்னர், அந்த நகைகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அவை போலி நகைகள் என்பது தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவன மேலாளர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் தூத்துக்குடியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி விரைந்த தனிப்படை போலீசார், அங்கு பதுங்கியிருந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த டில்லிபாபு, சென்னை தி.நகரைச் சேர்ந்த பிரவீன், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் வடபழனி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பிடிபட்ட கும்பல் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் போலி நகைகளை அடகு வைத்து, நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Secret Link