Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை தொடங்கி வைத்து ஓட்டி பார்த்த முதல்வர் விஜய்

தமிழகத்தில் மலை கிராமங்கள் மற்றும் எளிதில் வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப்பகுதிகளில் வாழும் மக்களின் மருத்துவத் தேவைகளுக்காக, 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களை முதலமைச்சர் விஜய் இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வின் போது, ஆம்புலன்ஸின் தரம் மற்றும் வசதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர், திடீரென ஆம்புலன்ஸ் ஜீப்பை அவரே ஓட்டிப் பார்த்து அதன் செயல்பாட்டைச் சரிபார்த்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

மலை கிராமங்களுக்கான பிரத்யேக சேவை சாதாரண 108 ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாத செங்குத்தான மலைப் பாதைகள், கரடுமுரடான சாலைகள் மற்றும் குண்டும் குழியுமான வனப்பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பழங்குடியின மற்றும் மலைவாழ் மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க இந்த 4-வீல் டிரைவ் (4×4) ஜீப்புகள் உதவும். பிரசவ கால அவசரங்கள், விஷக்கடி மற்றும் இதர மருத்துவ அவசர காலங்களில், மலை கிராம மக்கள் இனி டோலி கட்டி நோயாளிகளைச் சுமந்து செல்லும் நிலை இதன் மூலம் பெருமளவு குறையும்.

அதிநவீன மருத்துவ வசதிகள் இந்த ஜீப்களில் அவசர கால முதலுதவி உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் உயிர்காக்கும் அத்தியாவசிய மருந்துகள் என அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முதல்வரின் “மின்னல் வேக” டிரைவிங் வாகனங்களைத் தொடங்கி வைத்ததோடு மட்டுமல்லாமல், தானே ஸ்டீயரிங்கைப் பிடித்து, ஜீப்பை ஓட்டிப் பார்த்த முதலமைச்சர் விஜய்யின் எளிமையான அணுகுமுறை அங்கிருந்த அதிகாரிகளையும், மருத்துவர்களையும் நெகிழச் செய்தது. மக்களின் வரவேற்பு: “மக்களுக்கான அரசு, மக்களின் இடத்திற்கே தேடி வரும்” என்பதற்கு ஏற்ப, விளிம்பு நிலை மக்களின் மருத்துவ வசதிக்காக எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை அடிமட்ட மக்கள் வரை பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

    error: Content is protected !!