சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அப்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
அமைச்சரவையில் இடம்பெற விசிக தலைவர் அண்ணன் திருமாவளவனை அழைக்கிறோம்; முதலமைச்சரின் விருப்பமும் அதுதான்.சமூக நீதி கொள்கையுடன் இருக்கும் தலைவர்கள் அமைச்சரவையில் இடம் பெற வேண்டும் என்பது முதல்வர் ஜோசப் விஜய்யின் நோக்கம்” என்றார்.
ஐயூஎம்எல், இடதுசாரிகள் என மத சார்பற்ற கொள்கையில் உள்ள அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்பது முதலவர் விஜயின் விருப்பம் என்றார்.
2026 தேர்தலுக்கு பின் தமிழகத்தில் இளைஞர்களும் பெண்களும் மாற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 50 வருடத்திற்கு பிறகு மாற்றத்திற்கான தலைவராக முதலமைச்சர் விஜய் உருவாகியுள்ளார்.
அதிமுக எதற்காக துவக்கப்பட்டது. தீயசக்தியான திமுகவை அகற்றுவதற்காகவே துவக்கப்பட்டது. தேர்தலில் அதிமுகவை எதிர்த்தே திமுகவின் பிரச்சாரம் அமைந்தது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு திமுக தனது கொள்கைகளை மறந்து அதிமுகவுடன் சேர்ந்து மக்களுக்கு எதிரான ஒரு அரசியலை உருவாக்க முற்பட்டார்கள். அதனால் தான் அதிமுகவில் ஒரு பிரிவு உண்டானது. அதற்கு சிவி சண்முகம் தலைமை தாங்கினார். அதிகாரத்திற்காகவோ, அமைச்சர் பதவிக்கோ அதிமுகவில் இருந்து வெளியே வரவில்லை என்று சிவி சண்முகம் தெளிவாக கூறினார்.
எம்ஜிஆர் மீது அளவு கடந்த விருப்பம் கொண்டவர் விஜய். அந்தக் கட்சிக்கு ஒரு பிரச்சினை நடக்கும்போது எங்களின் நிலைப்பாடு அவர்களுடன் தோழமை உணர்வுடன் செல்வது தான். ஆதரவு என்பதில்லை, தோழமையுடன் அதிமுகவை பார்க்கிறோம். சிவி சண்முகம் அடுத்தகட்ட செயல்திட்டங்களை அறிவிப்பார்.” என்று தெரிவித்தார்.
