அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘போர்வாள்’ தமிழ் நாளிதழை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்திருக்கும் ஒரு தரப்பினர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சி.வி. சண்முகம் தலைமையில் தனியாக செயல்பட துவங்கியுள்ளனர்.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக இருந்த ‘நமது எம்ஜிஆர்’ நாளிதழ், ‘ஜெ நியூஸ்’ தொலைக்காட்சி உள்ளிட்டவை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இவ்விரண்டிலும் கடந்த சில நாள்களாக இபிஎஸ் தரப்புக்கு எதிரான செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், போர்வாள் என்ற நாளிதழை அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் போர்வாள் நாளிதழை இபிஎஸ் இன்று வெளியிட்ட நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புகள் இனிமேல் ‘போர்வாள்’ என்ற நாளிதழ் மூலம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
