Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெண்ணிடம் புடவை நிறுவனம் ரூ.6.23லட்சம் மோசடி-திருச்சி க்ரைம்

திருச்சியில் வாலிபர் மாயம்..

ஸ்ரீரங்கம், வ உ சி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (34) இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் விடுதியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி முதல் 9 ந்தேதி வரை வேலைக்கு செல்லாமல் கார்த்திக் இருந்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட அவரது தாய் அமுதா கார்த்திகை திட்டி மீண்டும் வேலைக்கு செல்ல அனுப்பி உள்ளார். இந்நிலையில் கடந்த 11 ந்தேதி வேலைக்கு சென்ற கார்த்தி கமீண்டும் இரவு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப் பார்த்து எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அமுதா திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

திருச்சி நபரிடம் ரூ 7 லட்சத்து 10 ஆயிரம் மோசடி.. சைபர் கிரைம் போலீசார் விசாரணை

திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர் இணைய வழியில் வர்த்தகத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 10 ந் தேதிஒரு தனியார் பங்கு சந்தையில் இருந்து அவருக்கு வாட்ஸ் அப் குழு அழைப்பு வந்தது அதில் இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள் இதனை நம்பிய லட்சுமி நாராயணன் அவர்கள் கொடுத்த ஒரு செயலியை பதவி இறக்கம் செய்து அதில் ஒரு ஐடியை உருவாக்கி அதன் மூலம் ரூபாய் 7 லட்சத்து10 ஆயிரத்து 400 பணத்தை அனுப்பி உள்ளார். அதன் பிறகு அவருக்கு லாபம் கிடைக்காமல் இருந்தது,மேலும் அந்த தனியார் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமி நாராயணன் இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரில்
பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண்ணிடம் தனியார் புடவை நிறுவனம் ரூ 6 லட்சத்து 23 ஆயிரம் மோசடி..

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (51). இவர் கடந்த மார்ச் 9 ந் தேதி பேஸ்புக் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு தனியார் சில்க் புடவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதன் பிறகு அந்த தனியார் புடவை நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்பொழுது அந்த நபர் புடவை ரூ.800 என்று கூறவே அந்த பணத்தை கியூஆர் குறியீடு மூலம் அனுப்பி வைத்தார். பிறகு மறுநாள் புடவைஸ்ரீபிரியா வீட்டிற்கு வந்தது. பின்னர் அந்தபுடவை நிறுவனத்திலிருந்து ஒரு நபர் தொடர்பு கொண்டு புதிதா புடவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பேசி ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய ஸ்ரீபிரியா தன் பணம் ரூ 6 லட்சத்து 23 ஆயிரத்து 512 தொகையை அனுப்பி புடவை கேட்டுள்ளார். புடவை அனுப்புவதாக கூறிவிட்டு பிறகு அவருக்கு புடவை எதுவும் வரவில்லை. பின்னர் தான் ஏமாந்தது ஸ்ரீபிரியாவிற்கு தெரியவந்தது. இது குறித்து அந்த தனியார் புடவை நிறுவனம் மீது புகார் கொடுத்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!