Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-தமிழக அரசு

தமிழக அரசு விவசாய நிலங்களை மேம்படுத்தவும், மண்பாண்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நீர்நிலைகளில் இருந்து வண்டல் மண், களிமண், மற்றும் சவுடு மண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகச் செல்லாமல் எளிதாக அனுமதி பெற முடியும்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: இச்சேவையைப் பயன்படுத்த tnesevai.tn.gov.in (டிஎன் இ-சேவை) இணையதளம் மூலம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் வருவாய்த் துறை ஆவணங்களுடன் சரிபார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் (Tahsildar) மூலமாகவே 10 நாட்களுக்குள் இணைய வழியிலேயே அனுமதி ஆணை வழங்கப்படும்.

விவசாயிகள்: தங்களது நில ஆவணங்களை (பட்டா, சிட்டா, அடங்கல்) பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம்.

மண்பாண்டத் தொழிலாளர்கள்: தொழிலாளர் சங்கச் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் (VAO) சான்றுடன் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள்: சொந்த வீட்டு உபயோகத் தேவைக்காக விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!