இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி போராட்டம் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம் புகலூர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்த பொதுமக்களின் மனுக்கள் மீது கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு

விலையில்லா வீட்டு மனை பட்டா பெற தகுதியானவர்கள் என தேர்வு செய்துள்ளனர்..
இன்று வரை இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை இது குறித்து பலமுறை புகழூர் வட்டாட்சியர் நேரில் சந்தித்து முறையிட்டும் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மக்கள் குறைதீர் நாள் மனுக்கள் மூலமாக பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை இதனை கண்டித்து கரூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் வேலாயுதம்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சமையல் பாத்திரங்களுடன் சென்று புகழூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஒன்று கூடியவர்களை இந்த போராட்டத்திற்கு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டது.. மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பேச்சுவார்த்தையில் விரைவில் பட்டா வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக கூறி உறுதி கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது..
