Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மின்கட்டணம் உயர்த்தும் எண்ணம் இல்லை… அமைச்சர் நிர்மல்குமார்

சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது.. “சென்னையில் சீரமைப்பு பணிகல் நடைபெறுவதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின் தடை குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். 160க்கும் மேற்பட்ட இடங்களில் பல்வேறு காரணங்களால் தோண்டப்பட்ட குழிகள் காரணமாக வயர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. சீராக மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை

மின்துறையில் சீரமைக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. சோலார் பேனல் கொள்முதல் விவகாரத்தில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. மின்வாரியத்தில் தவறுகள் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாலும் உடனடி நடவடிக்கை. 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். டிஎன்பிஎஸ்சி பணி நியமனத்தில் எந்த வித முறைகேடும் நடக்காது” என்றார்.

error: Content is protected !!