மகாராஷ்டிர மாநிலத்தில் புலி தாக்கியதில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சந்திரப்பூர் மாவட்டம், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த 13 பெண்கள், டெண்டு இலைகளை சேகரிப்பதற்காக அதிகாலையிலேயே அருகிலுள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளனர். அவர்கள் காட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த புலி ஒன்று திடீரெனப் பெண்களைத் தாக்கியுள்ளது.
புலியின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். புலி தாக்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற பெண்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓடிச் சென்று உயிர் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கிராம மக்களை அச்சுறுத்தும் அந்தப் புலியைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
