Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூர் பஸ் ஸ்டாண்டிற்கு கருணாநிதி பெயர்.. திமுக கோரிக்கை

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட வேண்டும்.திருவரம்பூர் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி சூட்ட வேண்டும் என திருச்சி மாநகர திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டாக்டர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின்படி திருச்சி தெற்கு மாவட்டம் மாநகர திமுக செயற்குழு கூட்டம் மாநகர அவை தலைவர் நூர்கான் தலைமையில்,மாநகர தி.மு.க. செயலாளர்
மு மதிவாணன் முன்னிலையில் கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள் ,மாவட்ட பிரதிநிதிகள் மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்த, கழகத் தலைவருக்கு இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் ,
திருச்சி திருவெறும்பூரில் அன்பில் மகேஸ் பொய்யாமொழியால் கொண்டுவரப்பட்டு, தற்போது கட்டப்பட்டு வரும் திருவெறும்பூர் பேருந்து நிலையத்திற்கு “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்” கருணாநிதி பெயரைச் சூட்டி, பணியைத் துரிதப்படுத்தித் திறக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!