Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை அருகே 10 சிறுமி கொலை வழக்கில்…2பேர் கைது

கோவை அருகே 10 வயது சிறுமி கடத்தி படுகொலை செய்யப்பட்டு முப்புதலில் வீசப்பட்டார். இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாரா ? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே சூலூர் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலை கடைக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை, இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை, இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் இரண்டு பேருடன் சிறுமி சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கு இடையில் சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த சிறுமியின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து மேற்கு மண்டல ஐ.ஜி ரம்யபாரதி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி மற்றும் காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது ஆனால் யாரையும் கண்டுபிடிக்கவில்லை, இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமி தான் காணாமல் போனவர் என்பதும், அவரை இரண்டு பேரும் கடத்திச் சென்று கொலை செய்து உடலை முற்போதரில் வீசி சென்றதும் தெரியவந்தது.

போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி கடத்திச் சென்றவர்கள் பாலியல் பலாத்காரம் ? செய்து கொலை செய்துவிட்டு உடலை முட்புதரில் வீசியதாக தகவல் பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது சிறுமியின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கு இடையே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததாக கூறி சிறுமியின் உறவினர்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு சாக்லேட் தருவதாக கூறி கடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தற்பொழுது 10 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்திச் சென்று கொலை செய்ததாக நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தற்பொழுது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வந்த கார்த்திக் என்பவரையும், அவனுக்கு உதவியாக இருந்தா மோகன்ராஜ் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து முழு விவரம் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைதான கார்த்திக், போலீசாரிடமிருந்து தப்பியோட முயன்றபோது கீழே விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான மோகன்ராஜை வரும் மே 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!