Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சினிமா கவர்ச்சி தற்காலிகமானது! மக்கள் மீண்டும் தி.மு.க-வை ஏற்பார்கள் – ஸ்டாலின் உறுதி

தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
பேசியதாவது:- நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம். இன்னும் சொல்ல வேண்டுமானால் நாம் ஆட்சியை இழக்கவில்லை. நம்முடைய தயவில் தான் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இது போன்ற தோல்விகளை என்னை போன்ற சீனியர்கள் நிறைய பார்த்து இருக்கிறோம். ஆனால், இளைஞர்களாகிய உங்களுக்கு பெரிய வருத்தத்தை தந்திருக்கிறது. தி.மு.க. ஆளும் கட்சியாக வெற்றி பெறாமல் போனதைவிட, நம்ம தலைவர் வெற்றி பெறாமல் போனது தான் வருத்தமாக இருக்கிறது என்று நான் கேட்கிற அளவில் நிறையபேர் பேசுவதை பார்க்கிறேன். உங்கள் அன்பை நான் புரிந்து கொள்கிறேன். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், என்னைவிட இந்த இயக்கம் தான் பெரியது. தனிப்பட்ட ஒருவரின் தோல்வியை விட கட்சியின் தோல்வி தான் பெரியது. நான் அதற்கு தான் வருத்தப்படுகிறேன். நானே தோல்வி அடைந்து கட்சி வெற்றி பெற்றிருந்தால் நிச்சயமாக நான் மகிழ்ந்து இருப்பேன்.

தி.மு.க.வால் தொடர்ந்து 2 முறை வென்று ஆட்சி பொறுப்பேற்க முடியாது என்பதை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக இந்த முறை கடுமையாக உழைத்தேன். நான் மட்டும் அல்ல நீங்களும் உழைத்தீர்கள். அது நிறைவேறாத வருத்தம் தான் எனக்கு உள்ளது. நான் பார்க்காத வெற்றியும் இல்லை. நான் பார்க்காத தோல்வியும் இல்லை.

ஆனால், நாம் இந்த தேர்தலில் ஏன் தோற்றோம் என்று மனம் திறந்து சொல்ல வேண்டுமானால், குழந்தைகள் ஒரு பொம்மையை புதிதாக பார்த்தால் அது வேண்டும் என்பார்கள். ஆனால், 2 நாட்களில் அது ‘போர்’ அடித்துவிடும். தூக்கி போட்டுவிடுவார்கள். அப்படி தான் தனக்கு பிடிச்ச நடிகர் ஒருத்தர் கட்சி ஆரம்பித்ததால் ஒரு ஆர்வத்தில் வாக்களித்து உள்ளார்கள். கொஞ்ச நாளில் இந்த உண்மை நிலை அவர்களை யோசிக்க வைக்கும். குழந்தை அம்மாவை தேடுவது மாதிரி மக்கள் நம்மை தான் மீண்டும் ஏற்றுக் கொள்வார்கள்.
இப்போது நடந்திருப்பது அரசியல் சுனாமி அல்ல. சினிமா சுனாமி தான். அதுவும் பெரும்பான்மை பெற்று அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. நமது கூட்டணி கட்சிகளின் துணையோடு தான் ஆட்சி புரிகிறார்கள். நிச்சயமாக இந்த ஆட்சி 5 ஆண்டு காலம் நீடிக்கும் ஆட்சி அல்ல. ஜனநாயக முறையில் மக்கள் அளித்த தீர்ப்பு சினிமா கவர்ச்சிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் பேசினார்.

error: Content is protected !!