ஈரோடு மாவட்டம், தாளவாடி மலை பகுதி அருகே கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியான மழையால் தாளவாடி மலை பகுதிகளில் உள்ள நீரோடையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்நிலையில் காட்டாற்று வெள்ளத்தின் சீற்றத்தை காண மலை அடிவார கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் நீரோடை பகுதிக்கு சென்றுள்ளான். அப்போது, எதிர்ப்பாராத விதமாக சிறுவன் நீரோடையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
